அகிலமாண்டிடும் வல்லவனே
அருள்
தேடி வேண்டிநிற்கும் இளமாணவர் எமக்கருளி - நல்ல கல்வியைத் தாராயோ
(அகிலமாண்டிடும்)
சர்வ வல்லமை யுள்ளவனே சம நீதியாய் ஆள்பவனே - அல்லாஹ்... இறைமுறை வழி ஒழுகிடவே நபிமுறை அறிந்திடவே - இரு கரங்களை ஏந்துகிறோம் வல்ல இறைவனே நிறையருள்வாய்
(அகிலமாண்டிடும்)
இமாம் கஸ்ஸாலி கலைகூடம் புகழோங்கிட வேண்டுகின்றோம் - அல்லாஹ்... இரு உலகிலும் ஜெயம் பெறவே பல கலைகளும் பயின்றிடவே - உன்னை பணிந்திங்கு வேண்டுகின்றோம் கல்வி அறிவினை எமக்கருள்வாய்
(அகிலமாண்டிடும்)





